வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

மீலாத் விழா-19-02-2012

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, சென்னை சார்பில்  19 .02 . 2012 ஞாயிற்றுக்கிழமை  காலை மணி 9.30 முதல் மதியம்  2.00 மணி வரை  அண்ணல் நபி முஹம்மது நபி   ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் உதய தின விழா (மீலாத் விழா) மண்ணடி  மரைக்காயர் லெப்பை தெருவிலுள்ள  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் மிகவும் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.  
விழாவிற்கு சங்கைமிகு செய்யது மஸ்வூது மௌலானா அல்ஹாதி  அவர்கள் தலைமை வகித்தார்கள். மௌலவி A. பக்கிர் முஹம்மது நூரி  ஹக்கியுல் காதிரி கிராஅத் தினார்.


கலீபா  A. அப்துல் ரவூப்,  வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம் அவர்கள் வரவேற்புரை அளித்தார்கள்.  
மௌலவி ஹாபிள் P.Z. பரகத் அலி பாசில் பாகவி,   தலைமை இமாம், ஜாமிய்யா பள்ளிவாசல்,கெல்லிஸ் மேடவாக்கம்  அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லாம் அவர்களின் ஞான விளக்கங்களைப்பற்றி சிறப்புரையாற்றினார்கள்.
 கலீபா M.  பீர் முஹம்மது, வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம் அவர்கள் நபி புகழ்ப்பா பாடினார்கள்.
 

                                     நபி புகழ்ப்பா சேக் மதார் பாடினார்.

மௌலவி ஹாபிள்   அப்ஸளுள் உலமா M. சதீதுத்தீன் பாசில் பாகவி, M.A., M.Phil., Ph.D., தலைமை இமாம், அடையாறு பள்ளிவாசல்  அவர்கள் மீலாத் விழாவின் சிறப்பைப்பற்றியும் மனிதநேயம் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.
ஜனாப். முஹம்மது இர்பான் அவர்கள் "நாத்" எனப்படும் நபி  புகழ்ப்பா பாடினார்.
நத்தர் ஒலி மற்றும் ஆசிப் ஞான பாடல் பாடினார்கள்.
மௌலவி அப்ஸளுள் உலமா  M. ஷெய்கு அப்துல்லா ஜமாலி,M.A., தலைவர், சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்   அவர்கள் அருமை நபி  ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லாம் அவர்களின் சிறப்புகளைப்பற்றியும் அவர்கள் காட்டிய இஸ்லாம் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்
மதுக்கூர் கலீபா காலித் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஹாஜா முஹைதீன்   ஹக்கியுல் காதிரி  நன்றியுரை கூற


மெளலவி ரஹ்மத்துல்லா ஆலிம் அவர்கள் துஆவுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.  முடிவில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில்  மதிய உணவு அளிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக