ஞாயிறு, 23 ஜனவரி, 2011

புனித இராத்திபு நிகழ்ச்சி 18-01-2011






சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் S.I.தவ்லத் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 ஸபர் மாதம் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.ஜனவரி மாதம் 18ம் தேதி செவ்வாய்கிழமை புதன் இரவு இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

சென்னை மாதாந்திர கூட்டம் 16-01-2011

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ஹாஜா முஹையதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.
----------------------------------------------------------------------------------------


ஹாஜா முஹையதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஸபர் மாதத்தின் சிறப்பு பற்றியும்,குர்ஆன் பரிபூரணமானது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------
மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஷரிகத்,தரிகத்,ஹகிகத்,மஃரிபத் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------
Prof.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------

சையது அப்துல் மஜீது ஹக்கியுல் காதிரி அவர்கள் “அன்பே என் அவ்னென்னும் அன்பே” என்ற ஞானப் பாடல் பாடினார்.
---------------------------------------------------------------------------------------

அப்துல் பாஸித் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஷெய்கை கைப்பிடித்தவருக்கே இறையச்சம் வரும்,ஷெய்கே இறையச்சமூட்டுகிறார்கள் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------

ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஆதி-அந்தம் நான்,ஆரம்பம்-முடிவு,கர்வம்,பொறாமை,விட்டு அகல வேண்டும் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------

அப்துல் ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் அனைத்திலும் ஹக்கை காண்பது,அனைத்திலும் ஹக்கை நினைப்பது பூரண வணக்கமாகும் என்று உரையாற்றினார்
-----------------------------------------------------------------------

முஹம்மது ரஹமத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்கள் “ஞானானந்த ஞானோதயனே நான்” என்ற ஞானப் பாடல் பாடினார்.
---------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்


தவ்பா பைத் ஓதி, தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.