ஞாயிறு, 21 மார்ச், 2010

சென்னை மீலாது விழா 21/03/2010

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக மீலாது விழாவில் நடந்த நிகழ்ச்சியின் பட காட்சி





மெளலானா சலாஹீத்தீன் முஹம்மது அய்யூப்
(தமிழ்நாடு அரசு தலைமை காழி)

கவிஞர் E.பதுருதீன்

முனைவர்.ஹ.மு.நத்தர்ஷா

A.ஷேக் மதார்

மெளலவி A.K.A.அப்துல் காதிர் மிஸ்பாஹி


பெருங்கவிக்கோ.வா.மு.சேதுராமன்

முஹம்மது ஹனீப் ரஸாக் காதிரி
திவ்யா பிரபா
முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் Ex.M.P.


சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக மீலாது விழா வெகு விமரிசையாக நடந்தது.ஆண்றோர்கள் சான்றோர்கள் அறிஞர் பெருமக்கள் ஆத்மசகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

ஞாயிறு, 14 மார்ச், 2010

மீலாதுவிழா அழைப்பிதழ்



மாதாந்திர கூட்டம் 07-03-2010






சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் கலிபா அட்வகேட் அப்துல் ரவூப் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலிபா அட்வகேட் அப்துல் ரவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள் அதற்குபின் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.

தலைமை உரையாக கலிபா அட்வகேட் அப்துல் ரவூப் அவர்கள்
முகம்மது நபி (ஸல்) அவர்கள் அருட்கொடை என்று உரையாற்றினார்.

இஞ்சினியர் ஹைதர் நிஜாம் அவர்கள் இலங்கை வெலிகாமாவில் நடந்த மீலாது விழா நிகழ்ச்சியை பற்றி உரையாற்றினார்.

காஞ்சி முகம்மது யூசுப் அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்கள்
மீது முஹப்பது வைத்தால் என்ன நன்மை என்று உரையாற்றினார்.

Dr.குலாம் முகம்மது அவர்கள் ஸலாவத்தின் மகிமை,குருவின் மூலம் மட்டுமே இறையை அடைய முடியும் என்று உரையாற்றினார்.

திண்டுக்கல் ரஹ்மத்துல்லா அவர்கள் சிங்கப்பூரில் வாப்பா நாயகத்துடன் இருந்த நிகழ்சியை பற்றி உரையாற்றினார்.

Dr.இஞ்சினியர் முகையத்தின் அவர்கள் முகையத்தின் ஆண்டகையின் உச்ச நிலையை பற்றி உரையாற்றினார்.

இறுதியாக மாஹாதீர் அவர்கள் இந்த காலத்துக்கு ஏற்றவாறு விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தவ்பா பைத்து ஓதி அஸர் தொழுகைக்கு பின் தப்ருக் வழங்கி கூட்டம் நிறைவு பெற்றது.







சனி, 13 மார்ச், 2010

சென்னை மாதாந்திரக் கூட்டம் 21-02-2010

ஏகத்துவ் மெய்ஞ்ஞான சபை
கூட்டம் நடைபெற்ற இடம் : ஹாஜா முகையத்தீன் அவர்கள் வீடு
கூட்டம் நடைபெற்ற தேதி : 21-02-2010
தலைமை: கலிபா அட்வகேட் பீர்முகம்மது
கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்களால் கிராத் ஓதப்பட்டது

---------------------------------------------------------------------------------------------------

கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் மவ்லீதும் அதன் சிறப்பு,பலன்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------
கலிபா அட்வகேட் அப்துல் ரவூப் அவர்கள் நூரே முகம்மதியா, நபிகளாரின் நற்பண்புகள், என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------


Dr.இங்சினியர் முகையத்தின் அவர்கள் காலத்தின் ரசூல் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------------

இங்சினியர் அப்துல் ஜலீல் அவர்கள் இன்ஸானுல் காமில்,இயற்கையின் விளக்கம் ஆகிய தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி


தவ்பா பைத் ஓதி தப்ரூக் வழங்கி கூட்டம் நடைபெற்றது

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 16 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் சுபுஹானி அவர்கள் மூலம் எம்மார் & கோ வில் 02-03-2010 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 15 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் முஸத்திக் அவர்களுடைய வீட்டில் 01-03-2010 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது

மௌலுது மற்றும் இராத்திபுமஜ்லிஸ்




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 14 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் ஜெய்லானி அவர்கள் வீடு 28-02-2010 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்குபின் புனித இராத்திபுமஜ்லிஸ் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது

திங்கள், 1 மார்ச், 2010

இலங்கை வெலிகமையில் மீலாதுப் பெருவிழா




இலங்கைவெலிகமையில் கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ரஸூலேகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தின விழா மிகச் சிறப்புடன் பிப்ரவரி 26 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் துவங்கப்பட்டு ரசூல் மாலை ஓதப்பட்டது.
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கத்தார், குவைத் மற்றும் அமீரகம் துபையிலிருந்து பல இஸ்லாமியர்கள் இந்நிகழ்ச்சியை கௌரவிக்கும்முகமாக வருகை புரிந்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிப்ரவரி 27 மாலை சிறப்புவிருந்தினராக "இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் இந்திய பாரளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர்மைதீன் எம்.ஏ" அவர்களும் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் மாநில மார்க்க அணிச்செயலாளர் தளபதி ஷபிக்குர்ரஹ்மான் அவர்களும் இலங்கை வெலிகம சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல்அவுன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் திரு இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளர்கள்.
மஃரிப் தொழுகைக்குப்பின் சங்கைமிகு கலீல்அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் நடைப்பெற்ற இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா (இராத்தீபு மஜ்லீஸ்)நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.

மீலாதுன்னபி விழாவில் அரபு-தமிழ் அகராதி வெளியீடு
இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுன்னபி பெருவிழாவில் சிறப்பம்சமாக குத்புல்பரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்களால் தூயத் தமிழில் எழுதப்பட்ட அரபு-தமிழ் அகராதி வெளியிடப்பட்டது. சுமார்45 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இவ்வகராதி அவர்கள் மகனார் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல்ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்களின் அயராத முயற்சியின் பேரில் பல நவீன கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டு கண்மணிநாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில் வெளியீடப்படுவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.இவ்வகராதியை சிறப்புமிகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய செயலாளரும் அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைய்தீன் அவர்களால் வெளியீடப்பட்டது.இரண்டாம் பிரதியை சங்கைமிகு இமாம் கலீல் அவுன் மௌலானா அவர்கள் இலங்கை மகாண கவர்னர் அஸ்ஸையது அலவி மௌலானா அவர்களின் அன்பு புதல்வருக்கு வழங்கினார்கள்.மாலை சங்கைமிகு இமாம் கலீல் அவுன் மௌலானா அவர்களின் அருள்மொழிக்கோர்வையான மனிதா என்ற நூலும் ஆத்மீக சகோதரர் மதுக்கூர் கலீபா அட்வகேட் லியாகத்அலி அவர்கள் மறைஞானப்பேழை மாதப்பத்திரிக்கையில் இருபது ஆண்டுகளாக கேள்வி பதில் பகுதியில் பதிலளித்து வந்த மெய்யொளி பதில்கள் நூலாக வெளியீடப்பட்டது.