வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புனித இராத்திபு நிகழ்ச்சி




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் S.B.ஆசிப் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 13ல் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.ஏப்ரல் மாதம் 17ம் தேதி ஞாயற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

மாதாந்திர கூட்டம் - 10-04-2011


சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ஹாஜா முஹையதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.
--------------------------------------------------------------------------------------




தலைமை உரையாக ஹாஜா முஹைத்தீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் இந்த மாதம் ஜமாலிய்யா வாப்பா மாதம், அவர்களின் உயர்வு,உன்னத நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------- --------------------

மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் அல்லாஹீவுக்கும்,ரசூலுக்கும் கட்டுப்படுங்கள், உங்கள் தலைவருக்கும் கட்டுப்படுங்கள் என்ற குர்ஆன் வசனம் பற்றி விரிவாக உரையாற்றினார்.
-------------------------------------------------------- -------------------- ---------


Er.ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்கள் அல்லாஹ் பற்றி அறிவது முதல் கடமை,அறிவின் கர்வம் அகப்பொறாமை அகல வேண்டும் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------


Prof.இப்ராஹிம் கலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் மாதந்திர கூட்டத்தில் நமது ஷெய்கு நாயகம் ஹாளிராகி உள்ளார்கள்.கூட்டத்தில் எந்த கருத்து வெளியாக வேண்டுமோ அந்த கருத்து மட்டுமே வெளியாகும் என உரையாற்றினார்.
-------------------------------------------------------- ----------------------------


S.B.ஆசிப் ஹக்கியுல் காதிரி அவர்கள் இறைருப்பாவிலிருந்து ஏகாந்த பாடல் பாடினார்.
-------------------------------------------------------------------------------------------


O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஹக்கைப்பற்றி சிந்திக்க வேண்டும் வாப்பா நாயகத்தின் பிள்ளைகள் வைரக்கல் என்று உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------


ஆயத்துல்லா குமைனீ ஹக்கியுல் காதிரி அவர்கள் கலீலே கலீலே என்ற பாடலை பாடினார்.
-------------------------------------------------------------------------------------------


முஹம்மது ரஹ்மத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்கள் ஸஹாபாக்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான், முரீதுகள் ஷெய்கு நாயகத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------


அப்துல் ஜலில் ஹக்கியத்துல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயத்திடம் மைய்யத்தாக இருக்க வேண்டும்,ஷெய்கு நாயகம் இல்லாத இடமே இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்





தவ்பா பைத் ஓதி, தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.



சனி, 9 ஏப்ரல், 2011

கந்தூரி ஜியாரத் விழா நாள் 06-04-2011






சம்பைப்பட்டினத்தில் ஞானமகான் வலிய்யுல் அக்பர் செய்யிதினா ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா (ரலி) அவர்களின் புனித கந்தூரி ஜியாரத் விழா மிகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சங்கைமிகு சைய்யது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்களின் முன்னிலையில் மெளலிது,புனித ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது.இவ்விழாவில் முரீதீன்கள்,அஹ்பாபுகள் கலந்து சிறப்பித்தார்கள்.இவ்விழாவிற்க்குப்பின் தப்ருக்,கந்தூரி உணவு வழங்கப்பட்டது.

புனித இராத்திபு நிகழ்ச்சி




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.மார்ச் மாதம் 20ம் தேதி ஞாயற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.