சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையின் முலம் அப்துல் வஹாப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில்
ஹிஜ்ரி 1435 முஹர்ரம் மாதம் பிறை 14ல் (நவம்பர் மாதம் 19ம் தேதி செவ்வாய்
பின்னேரம் புதன் இரவு)மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல்
காதிரிய்யா ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள்
பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்
தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது
வியாழன், 21 நவம்பர், 2013
வெள்ளி, 13 செப்டம்பர், 2013
சென்னையில் உதய தின விழா
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை,சென்னை சார்பில் 08/09/2013 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.30 முதல் மதியம் 2.00 மணி
வரை பரிசுத்த ஹக்கின் மளுஹரும் எம்பெருமானார் அண்ணல் நபி முஹம்மது நபி (ஸல்)
அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசும் முஹையுத்தீனியத் தோன்றலுமான,சங்கைமிகு
செய்கு நாயகம் குத்துபுஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத் ஜமாலிய செய்யது கலீல் அவ்ன் மெளலான
அல்ஹஸனியுள் ஹூசைனியுள் ஹாஷிமி நாயகம் அவர்களின் உதய தின விழா மண்ணடி மரைக்காயர்
லெப்பை தெருவிலுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைமையகத்தில் மிகவும் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சங்கைமிகு செய்யது மஸ்வூது மெளலானா அல்ஹாதி அவர்கள் தலைமை
வகித்தார்கள்.மெளலவி முஹம்மது அசன் ஹக்கிய்யுல் காதிரி யாசினி கிராஅத்
ஒதினார்.கஸிதத்துல் அவ்னிய்யா,கஸிதத்துல் அஹமதிய்யா கலந்துகொண்ட எல்லோராலும்
சிறப்பாக ஒதப்பட்டது.கலீபா அட்வகேட் அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
வரவேற்புரை அளித்தார்கள்.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி,சுபுஹானி ஹக்கிய்யுல் காதிரி,சலாஹூதீன் ஹக்கியத்துல் காதிரி,ஆகியோர் ஆன்மீகப் பாடல் பாடினார்கள்.சங்கைமிகு செய்யது மஸ்வூது மெளலானா அல்ஹாதி அவர்கள் தலைமை
உரை வழங்கினார்கள்.
மெளலவி குலாம் காதிர் ஹக்கிய்யுல் காதிரி யாசினி,மெளலவி பக்கிர் முஹம்மது
ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி,செய்யது யாசினி அலி மெளலானா அல்ஹாதி அவர்கள், மெளலவி
முஹம்மது ரபிவுத்தீன் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி, அட்வகேட் மீர்ஜாவ்விது ஹக்கிய்யுல் காதிரி,முஹம்மது அசன் ஹக்கிய்யுல் காதிரி யாசினி ஆகியோர்
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் சிறப்புகளைப்பற்றியும் அவர்கள் காட்டிய இஸ்லாம்
வாழ்க்கை நெறிமுறைகள்,மனிதநேயம் பற்றியும்,ஞான
விளக்கங்களைப்பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்.
O.m.C.ஜீலானி ஹக்கிய்யுல்
காதிரி நன்றியுரை வழங்க விழா சிறப்பாக நிறைவுற்றது.சங்கைமிகு செய்யது மஸ்வூது மெளலானா அல்ஹாதி
அவர்கள் துஆ ஒதிய பின் லுஹர் தொழுகை முடிவில்
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் வந்தவர் அனைவர்களுக்கும் தப்ருக்கும்,நினைவு பரிசும்,மதிய விருந்தும் அளிக்கப்பட்டது.
வியாழன், 29 ஆகஸ்ட், 2013
புனித இராத்திபு நிகழ்ச்சி – 22-08-2013
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் சலாஹூதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
வீட்டில் ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதம் பிறை 14ல் (ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வியாழன்
பின்னேரம் வெள்ளி இரவு)மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல்
காதிரிய்யா ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள்
பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்
தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது
மாதாந்திர கூட்டம் -18-08-2013
சென்னை
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் ஆகஸ்ட் மாதம் 18அம் தேதி கூட்டம்
நடைபெற்றது.கிராஅத் அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒத ஏகாந்த பாடல்
சுபுஹானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.
அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாயகம் (ஸல்) அலைவஹிவஸ்ஸிம் அவர்கள் இல்லையானால் எவ்வாறு நாம் இறைவனை அறிந்திருக்க முடியாதோ,அவ்வாறே நமது ஷெய்கு நாயகம் இல்லையானால் ஞானம் நமக்கு கிடைத்திருக்காது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தினமும் ஒருமுறையாவது ஸலவாத் சொல்லுங்கள் என ஷெய்கு நாயகம் கூறுகிறார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மீர்ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தன்னை அறிவதே-ஞானம், சூபிஸம்- இன்பம்,துன்பம் இரண்டையும் சலனமற்ற நிலையில் மனே நிலையை ஒரு நிலைப்படுத்தும் அனுபவ பயிற்சியாகும் என்று உரையாற்றினார்.
இப்ராஹிம் கலில் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தாயாகவும்,தந்தையாகவும் நமது ஷெய்கு நாயகம் வழிகாட்டி நமது தேவையாணதை நாம் கேட்காமலே தருகிறார்கள் என்று உரையாற்றினார்.
சலாவுதீன ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகத்தில் சொல் அப்படியே நடக்கும் என்பதற்கு என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளே உதாராணமாகும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் உங்கள் உடலிலும் தன்மையிலும் எண்ணத்திலும் நப்ஸிலும் அல்லாஹ் இருக்கிறான் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தஃபா பைத் ஒதி அஸர் தொழுகைக்குப்பின் துஆ ஒதி தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
செவ்வாய், 30 ஜூலை, 2013
பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்
சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான
சபையின் முலம் ஆத்ம சகோதரர் o.m.c.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி
அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1434 ரமாலான் மாதம் பிறை 17ல் பத்ரு மவ்லுது மற்றும் இஃப்தார்
நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள்
பெருந்திரளாக கலந்து இப்புனித நாளை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்
தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நி்றைவுற்றது.
செவ்வாய், 28 மே, 2013
மாதாந்திர கூட்டம் -19-05-2013
சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையின் சார்பில் மே மாதம் 19அம் தேதி
கூட்டம் நடைபெற்றது.கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம்
ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் ஒத ஏகாந்தபாடல் Prof.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி
அவர்கள் பாடினார்.
தலைமை உரையாக ஹாஜா முகையதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஹக்கை பற்றிய அறிவை பரப்புவதற்காகவே நமது ஷெய்கு நாயகம் இங்கு வருகிறார்கள் என்று உரையாற்றினார்.
மெளலவி பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஹூப்புன் நபியுக்கும்,வஹூப்பு அஹ்லுல்பைத்தி,வகிராஅத்துல் குர்ஆனி ஆகிய முன்றையும் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள் என்று நபி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னதாக அலி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று உரையாற்றினார்.
இபுறாகிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் அல்லாஹ் பரிபூரணமானவன்,முழுபிரபஞ்சமும்
அல்லாஹ்வாகவே உள்ளது இதில் கூடுதல்,குறைதல் இல்லை என்று உரையாற்றினார்.
முஹம்மது சலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது மதரஸாவுக்கும,நமது சபைக்கும் நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும்.நமது அறியா புறத்திலிருந்து நன்மைகள் கிடைக்கும் என்று உரையாற்றினார்.
அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் அல்லாஹ்வை பற்றி அறிந்து
கொள்வதற்கும் ஞானத்தை விளங்க அதைப்பற்றி பேச,சிந்திக்க செய்யவே மாதந்திரக்கூட்டம் நடைபெறுகிறது
என்று உரையாற்றினார்.
புஹாரி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நான் அறிவிலிருந்து உள்ளேன்,அறிவு நாட்டத்தின்றுமுள்ளது.நாட்டம் வெண்முத்திலின்றும் உள்ளது-நமது ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களுக்கு காலம்,இடம் என்ற மட்டு இல்லை பரிபூரணமாகவே உள்ளார்கள் என்ற
தலைப்பில் உரையாற்றினார்.
தெளபா பைத்து ஒதி அஸர் தொழுகைக்குப்பின் துஆ ஒதி தப்ருக் வழுங்கி கூட்டம்
இனிதே நிறைவு பெற்றது.
வியாழன், 2 மே, 2013
புனித இராத்திபு நிகழ்ச்சி – 25-04-2013
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் S.I. தவ்லத் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1434 ஜமாதுல் ஆகிர் பிறை 14ல்
ஏப்ரல் மாதம் 25ம் தேதி வியாழன் பின்னேரம் (வெள்ளி இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின்
இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும்
ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன
இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
மாதாந்திர கூட்டம் -21-04-2013
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் ஏப்ரல் மாதம் 21அம் தேதி கூட்டம்
நடைபெற்றது.கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒத
ஏகாந்த பாடல் ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.
தலைமை உரையாக கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பிறப்பு,கராமத்துக்கள் என்ற
தலைப்பிலும்,விடாமுயற்சி வெற்றி நிச்சயம் என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்.
நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பிறப்பு,கராமத்துக்கள் என்ற
தலைப்பிலும்,விடாமுயற்சி வெற்றி நிச்சயம் என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்.
அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூலை உகப்பது
பிரபஞ்சத்தையே உகப்பதாகும்,பிரபஞ்ச சுழற்சியே ரசூலியத்தில் உள்ளது
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பிரபஞ்சத்தையே உகப்பதாகும்,பிரபஞ்ச சுழற்சியே ரசூலியத்தில் உள்ளது
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Er.ஹைதர்
நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூலுள்ளாஹ் காலத்தில்
ஷகாபாக்கள் எவ்வாறு ஈர்க்கப்பட்டார்கள் அதேபோல் நமது ஷெய்கு
நாயகத்திடம் முரீதுகள் ஈர்க்கப்படுகிறார்கள் என்ற தலைப்பில்
உரையாற்றினார்.
ஷகாபாக்கள் எவ்வாறு ஈர்க்கப்பட்டார்கள் அதேபோல் நமது ஷெய்கு
நாயகத்திடம் முரீதுகள் ஈர்க்கப்படுகிறார்கள் என்ற தலைப்பில்
உரையாற்றினார்.
Er.அப்துல்
ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகத்தின் பொன்
மொழிகள்: வாழக்கூடிய வலிமார்கள் அதிகமானோர் நமது முரீது பிள்ளைகள்,
இந்த ஸமானில் நம்மை அண்டியோர் பெரும்பேறு பெற்றவர்கள் என்ற
தலைப்பில் உரையாற்றினார்.
மொழிகள்: வாழக்கூடிய வலிமார்கள் அதிகமானோர் நமது முரீது பிள்ளைகள்,
இந்த ஸமானில் நம்மை அண்டியோர் பெரும்பேறு பெற்றவர்கள் என்ற
தலைப்பில் உரையாற்றினார்.
ஹாஜா முகையதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கலிமாவை
பரப்புவதற்காகவே நாம் இந்தியா வருகிறோம் அதாவது ஞானத்தை
பரிபூரணமாக விளக்குவதற்காகவே நாம் வருகிறோம் என்ற
உரையாற்றினார்.
பரப்புவதற்காகவே நாம் இந்தியா வருகிறோம் அதாவது ஞானத்தை
பரிபூரணமாக விளக்குவதற்காகவே நாம் வருகிறோம் என்ற
உரையாற்றினார்.
தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்கு பின் துஆவுடன் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே
நிறைவு பெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)