சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையின் சார்பில் மே மாதம் 19அம் தேதி
கூட்டம் நடைபெற்றது.கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம்
ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் ஒத ஏகாந்தபாடல் Prof.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி
அவர்கள் பாடினார்.
தலைமை உரையாக ஹாஜா முகையதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஹக்கை பற்றிய அறிவை பரப்புவதற்காகவே நமது ஷெய்கு நாயகம் இங்கு வருகிறார்கள் என்று உரையாற்றினார்.
மெளலவி பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஹூப்புன் நபியுக்கும்,வஹூப்பு அஹ்லுல்பைத்தி,வகிராஅத்துல் குர்ஆனி ஆகிய முன்றையும் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள் என்று நபி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னதாக அலி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று உரையாற்றினார்.
இபுறாகிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் அல்லாஹ் பரிபூரணமானவன்,முழுபிரபஞ்சமும்
அல்லாஹ்வாகவே உள்ளது இதில் கூடுதல்,குறைதல் இல்லை என்று உரையாற்றினார்.
முஹம்மது சலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது மதரஸாவுக்கும,நமது சபைக்கும் நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும்.நமது அறியா புறத்திலிருந்து நன்மைகள் கிடைக்கும் என்று உரையாற்றினார்.
அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் அல்லாஹ்வை பற்றி அறிந்து
கொள்வதற்கும் ஞானத்தை விளங்க அதைப்பற்றி பேச,சிந்திக்க செய்யவே மாதந்திரக்கூட்டம் நடைபெறுகிறது
என்று உரையாற்றினார்.
புஹாரி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நான் அறிவிலிருந்து உள்ளேன்,அறிவு நாட்டத்தின்றுமுள்ளது.நாட்டம் வெண்முத்திலின்றும் உள்ளது-நமது ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களுக்கு காலம்,இடம் என்ற மட்டு இல்லை பரிபூரணமாகவே உள்ளார்கள் என்ற
தலைப்பில் உரையாற்றினார்.
தெளபா பைத்து ஒதி அஸர் தொழுகைக்குப்பின் துஆ ஒதி தப்ருக் வழுங்கி கூட்டம்
இனிதே நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக