வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சென்னையில் உதய தின விழா

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை,சென்னை சார்பில் 08/09/2013 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.30 முதல் மதியம் 2.00 மணி வரை பரிசுத்த ஹக்கின் மளுஹரும் எம்பெருமானார் அண்ணல் நபி முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசும் முஹையுத்தீனியத் தோன்றலுமான,சங்கைமிகு செய்கு நாயகம் குத்துபுஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத் ஜமாலிய செய்யது கலீல் அவ்ன் மெளலான அல்ஹஸனியுள் ஹூசைனியுள் ஹாஷிமி நாயகம் அவர்களின் உதய தின விழா மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவிலுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைமையகத்தில் மிகவும் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சங்கைமிகு செய்யது மஸ்வூது மெளலானா அல்ஹாதி அவர்கள் தலைமை வகித்தார்கள்.மெளலவி முஹம்மது அசன் ஹக்கிய்யுல் காதிரி யாசினி கிராஅத் ஒதினார்.கஸிதத்துல் அவ்னிய்யா,கஸிதத்துல் அஹமதிய்யா கலந்துகொண்ட எல்லோராலும் சிறப்பாக ஒதப்பட்டது.கலீபா அட்வகேட் அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வரவேற்புரை அளித்தார்கள்.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி,சுபுஹானி ஹக்கிய்யுல் காதிரி,சலாஹூதீன் ஹக்கியத்துல் காதிரி,ஆகியோர் ஆன்மீகப் பாடல் பாடினார்கள்.சங்கைமிகு செய்யது மஸ்வூது மெளலானா அல்ஹாதி அவர்கள் தலைமை உரை வழங்கினார்கள்.




















மெளலவி குலாம் காதிர் ஹக்கிய்யுல் காதிரி யாசினி,மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி,செய்யது யாசினி அலி மெளலானா அல்ஹாதி அவர்கள், மெளலவி முஹம்மது ரபிவுத்தீன் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி, அட்வகேட் மீர்ஜாவ்விது ஹக்கிய்யுல் காதிரி,முஹம்மது அசன் ஹக்கிய்யுல் காதிரி யாசினி ஆகியோர் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் சிறப்புகளைப்பற்றியும் அவர்கள் காட்டிய இஸ்லாம் வாழ்க்கை நெறிமுறைகள்,மனிதநேயம் பற்றியும்,ஞான விளக்கங்களைப்பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்.
O.m.C.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி நன்றியுரை வழங்க விழா சிறப்பாக 

நிறைவுற்றது.சங்கைமிகு செய்யது மஸ்வூது மெளலானா அல்ஹாதி 

அவர்கள் துஆ ஒதிய பின் லுஹர் தொழுகை முடிவில்

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் வந்தவர் அனைவர்களுக்கும் தப்ருக்கும்,நினைவு பரிசும்,மதிய விருந்தும் அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக