சனி, 2 ஜூன், 2012

மாதாந்திர கூட்டம் - 20-05-2012

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம் மே மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கலீபா.Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார்.

---------------------------------------------------------------------------------------

தலைமை உரையாக கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் உயர்வு,மேன்மை,கராமத் ஆகியவற்றை எடுத்து உரை நிகழ்த்தினார்.
------------------------------------------------------------------------------


கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஒதினார்.

 ---------------------------------------------------------------------------------------

P.ஹாஜா முஹையத்தின் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் (ளாகிர்-பாதில்) உள்ரங்கம்-வெளிரங்கம் மற்றும் பேத,உதய, உருவ,வினையில் உனைமறந்தோம் ஆதியேகா என்ற தலைப்பில் உரையாற்றினார். 

------------------------------------------------------------------------------


அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாகூர் நாயகம்-பெரிய வாப்பா நாயகம் கடித தொடர்பின் விபரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------

I.முஹம்மது சலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகம் கூறியபடி நடந்தால் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------

O.M.C.ஜிலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் காலத்தின் முஹையத்தீனாகவும்,நாகூர் ஆண்டகையாகவும்,பெரிய வாப்பா நாயகமாகவும்,நமது ஷெய்கு நாயகமே உள்ளார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 -------------------------------------------------------------------------------


அஸர் தொழுகைக்கு பின் தவ்பா பைத் ஒதி தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.


புதன், 9 மே, 2012

புனித இராத்திபு நிகழ்ச்சி - 06/05/2012






சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் Eng.ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் சங்கை மிகு யாசீன் அலி மெளலானா,சாமிஸ் மெளலானா அவர்களின் முன்னிலையில் ஹிஜ்ரி 1433 ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 14ல்,மே மாதம் 06ம் தேதி ஞாயிறு பின்னேரம் (திங்கள் இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்களும் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழஙகப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

வெள்ளி, 4 மே, 2012

மாதாந்திர கூட்டம்-15-04-2012

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கி ஏகாந்த பாடல் பாடினார்.

----------------------------------------------------------------------------------------------




கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒதினார்.
-------------------------------------------------------------------------------------




தலைமை உரையாக கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கீழக்கரை குத்துபுல் மத்ஹரி மஹானந்த பாவா அவர்களின் ஞான விளக்கங்களை எடுத்துரைத்தார்.
-----------------------------------------------------


கலீபா M.சீராஜூதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது எண்ணம்,செயல்,அனைத்தும் குருவிலே முழுவதுமாக குர்பானியாக வேண்டும் இந்த நிலையிலேதான் குருவிடம் ஞான அறிவின் தொடர்பு கிடைக்கும் என்று உரை நிகழ்த்தினார்.
------------------------------------------------------------------------------------------
திருச்சி ஸர்புத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருவிடம் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோமோ அவ்வளவு நம் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும் அதற்கு உதாரணமாக தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அற்புதங்களை கூறி உரை நிகழ்த்தினார்.
-----------------------------------------------------------------------------------------------


ஐனுல் ஹக் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கலையினிற் சிறந்தது ஞானம்- என்ற பாடல் பாடினார்.
-----------------------------------------------------




Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்தம்-தவ்ஹீத் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
-----------------------------------------------------
கூட்டத்தின் ஒரு பகுதி





தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்குபின் துஆவுடன் தப்ரூக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

திங்கள், 30 ஏப்ரல், 2012

புனித இராத்திபு நிகழ்ச்சி - 05-04-2012





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் ஜமால் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1433 ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 14ல் புனித இராத்திபு நிகழ்ச்சி நடந்த்து. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

திங்கள், 26 மார்ச், 2012

கந்தூரி ஜியாரத் விழா நாள் 25-03-2012

















சம்பைப்பட்டினத்தில் ஞானமகான் வலிய்யுல் அக்பர் செய்யிதினா ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா (ரலி) அவர்களின் புனித கந்தூரி ஜியாரத் விழா மிகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சங்கைமிகு சைய்யது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்களின் முன்னிலையில் மெளலிது,புனித ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது.இவ்விழாவில் கலீபாக்கள்,முரீதீன்கள்,அஹ்பாபுகள் கலந்து சிறப்பித்தார்கள்.இவ்விழாவிற்க்குப்பின் தப்ருக்,கந்தூரி உணவு வழங்கப்பட்டது. 


மாதாந்திர கூட்டம்-18/3/2012

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் மார்ச் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கி கிராஅத் ஒதினார்.
---------------------------------------------------


தலைமை உரையாக கலிபா Adv.M.பீர் முஹம்மது அவர்கள் குத்துபுமார்கள் ஒரு மனிதனின் தக்தீரை மாற்றியமைக்கும் அல்லது ஒத்தி போடும் வல்லமை உசையவர்கள் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------

Er.N.அப்துல் ஜலில் ஹக்கியுல் காதிரி அவர்கள் தஹஜ்ஜத்தின் அகமியம் என்னவென்றால் மனோ இச்சையையும்,உலக ஆசையையும்,தூங்க வைத்து இறைவனோடு மனம் கலப்பதே (தஹஜ்ஜத்) ஆகும் என்று உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
திவான் அப்துல் காதர் ஹக்கியுல் காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகமாக அன்பு செலுத்தச் செய்திருப்பது,எம் முரீதுகளிடம் நாம் செய்திருக்கும் முக்கியமான மாற்றம் என சங்கைமிகு ஷெய்கு நாயகம் அறிவித்திருக்கிறார்கள் என்று உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------

S.B.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார்.
--------------------------------------------------------------------------------------------------
P.அமிர் அலி ஹக்கியுல் காதிரி அவர்கள் இறையைப் பற்றி அறியாமை,அறிதல்,தெரிதல்,புரிதல்,உணர்ச்சி நிலை (உணர்ந்து இறையிலே கலந்த நிலை) என்று உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------
 செய்யது அப்துல் மஜீது ஹக்கியுல் காதிரி அவர்கள் ரசூலுள்ளாஹ்வின் அருமையை மற்றவர்கள் தெரிந்த அளவு கூட நாம் அறியாமல் இருக்கிறோம்.ரஸூலியத்தின் தாற்பறியத்தை நமது ஷெய்கு நாயகத்தின் அறிவுரைகள் மூலமாக அதிகமாக தெரிந்து கொள்ளலாம் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------

Adv.மிர்ஜவ்வாது ஹக்கியுல் காதிரி அவர்கள் தஸவு என்ற ஞான அறிவு குருவின் முலமே கிடைக்கும் குருவை கைபிடித்தலே இம்மைக்கும் மறுமைக்கும் உறுதியான வாழ்வு என்று உரையாற்றினார்.

தெளபா பைத்து ஒதி அஸர் தொழுகைக்குப்பின் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவடைந்தது



வெள்ளி, 23 மார்ச், 2012

புனித இராத்திபு நிகழ்ச்சி -08/03/2012





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் சங்கை மிகு யாசீன் அலி மெளலானா,சாமிஸ் மெளலானா அவர்களின் முன்னிலையில் ஹிஜ்ரி 1433 ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 14ல் புனித இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலிபாக்களும் ஆத்ம சகோதர்ர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்க்குப் பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்தச்சி நிறைவேறியது.