வெள்ளி, 4 மே, 2012

மாதாந்திர கூட்டம்-15-04-2012

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கி ஏகாந்த பாடல் பாடினார்.

----------------------------------------------------------------------------------------------




கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒதினார்.
-------------------------------------------------------------------------------------




தலைமை உரையாக கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கீழக்கரை குத்துபுல் மத்ஹரி மஹானந்த பாவா அவர்களின் ஞான விளக்கங்களை எடுத்துரைத்தார்.
-----------------------------------------------------


கலீபா M.சீராஜூதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது எண்ணம்,செயல்,அனைத்தும் குருவிலே முழுவதுமாக குர்பானியாக வேண்டும் இந்த நிலையிலேதான் குருவிடம் ஞான அறிவின் தொடர்பு கிடைக்கும் என்று உரை நிகழ்த்தினார்.
------------------------------------------------------------------------------------------
திருச்சி ஸர்புத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருவிடம் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோமோ அவ்வளவு நம் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும் அதற்கு உதாரணமாக தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அற்புதங்களை கூறி உரை நிகழ்த்தினார்.
-----------------------------------------------------------------------------------------------


ஐனுல் ஹக் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கலையினிற் சிறந்தது ஞானம்- என்ற பாடல் பாடினார்.
-----------------------------------------------------




Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்தம்-தவ்ஹீத் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
-----------------------------------------------------
கூட்டத்தின் ஒரு பகுதி





தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்குபின் துஆவுடன் தப்ரூக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக