சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் S.M.முஸ்தபா ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1433 முஹர்ரம் மாதம் பிறை 12ல் இராத்திபு மஜ்லிஸ் நடைப்பெற்றது.டிசம்பர் மாதம் 08ம் தேதி வியாழன் பின்னேரம் (வெள்ளி இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலீபாக்கள் மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
சனி, 10 டிசம்பர், 2011
இராத்திபு மஜ்லிஸ் நிகழ்ச்சி - 08-12-2011
வெள்ளி, 25 நவம்பர், 2011
சென்னை மாதாந்திர கூட்டம் - 20-11-11
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைமை உரையாக Adv.M.பீர் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் நபி இபுராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை),நபி (ஸல்) ஆகியோர்களின் உயர்வு பற்றி உரை நிகழ்த்தினார்.
ஆலீம் சேக் ஃபரீத் யாசினீ ஹக்கியுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்
Adv.மீர் ஜவ்வாது ஹக்கியுல் காதிரி அவர்கள் குர்பானியின் உண்மையான தாற்பரியம்,தான் என்ற அகந்தையையும்,எனக்கு என்ற பேராசையும் விட்டுவிடுவது தான் குர்பானியின் உண்மையான நோக்கம் என்று உரையாற்றினார்.
அப்துல் பாசித் ஹக்கியுல் காதிரி அவர்கள் தன்னை அறிந்தவன் அறிவாளி,அல்லாஹ்வை பற்றி அறிந்து கொள்ள குரு காட்டாயம் தேவை,அவர்களால் மட்டுமே ஈடேற்றம் கிடைக்கும் என்று உரையாற்றினார்.
சுபுஹானி ஹக்கியுல் காதிரி அவர்களால் ஞானப்பாடல் பாடினார்.
திவான் அப்துல் காதர் ஹக்கியுல் காதிரி அவர்கள் குருவில் சரண் அடைவது ஞானத்தின் முதற்படி,குருவில் அதிக அன்பு வைப்பது நம்மை மேன்மை அடையச் செய்யும் என்று உரை நிகழ்த்தினார்.
----------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்கள் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு தன்னிடமுள்ள குறைகளை அகற்றி விடுவது தான் சிறந்த வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்.
காதர் மீரா கனி ஹக்கியுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகம் தன்னை நம்பி,தன்னை அண்டிய பிள்ளைகளை பக்குவபடுத்தி ஹக்கிலே சேர்க்கிறார்கள் எனவே நாம் குருவிலே முழுவதும் ஒப்படைக்க வேண்டும் என்று உரையாற்றினார்.
காஞ்சி யூசுப் ஹக்கியுல் காதிரி அவர்கள் பெரியாரை துனை கோடல் என்ற திருக்குறள் அத்தியாயத்தில் குருவின் அவசியம்,முக்கியம்,நன்மை என்பதை தெளிவாக அறிய முடியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
வியாழன், 10 நவம்பர், 2011
இராத்திபு மஜ்லிஸ் நிகழ்ச்சி-10-11-2011
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் N.அப்துல் வஹாப் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 துல்ஹஜ் மாதம் பிறை 14ல் இராத்திபு மஜ்லிஸ் நடைப்பெற்றது.நவம்பர் மாதம் 10ம் தேதி வியாழன் பின்னேரம் (வெள்ளி இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
வியாழன், 27 அக்டோபர், 2011
புனித விசால்தின நிகழ்ச்சி - 2011
குதுபுகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹூஸைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 47வது வருட விசால் கந்தூரிதினம் 14/10/2011 வெள்ளிக்கிழமை மாலை சனிக்கிழமை இரவு சங்கை மிகு ஷெய்கு நாயகம் குத்துபுஸ்ஸமான் ஸம்ஷூல் வுஜுது ஜமாலிய்யா அஸ்ஸய்யது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹூஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.
மெளலிது, ராத்திபு, துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே
நிறைவு பெற்றது...அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது...இந்நிகழ்ச்சியில்
மெளலானாமார்கள்,கலீபாக்கள்,மூரீதீன்கள்,அஹ்பாக்கள் அனைவரும் கலந்து
சிறப்பித்தனர்.இந்த கந்தூரி நிகழ்ச்சி நாகை மாவட்டம் முக்கிய தினசரி நாளிதழ்களில்
வெளியானது.
இராத்திபு மஜ்லிஸ் நிகழ்ச்சி-11-10-2011
சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ஆத்ம சகோதரர் ரஹ்மத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்கள் மூலம் ஹிஜ்ரி 1432 துல்கஅதா மாதம் பிறை 14ல் இராத்திபு மஜ்லிஸ் நடைப்பெற்றது.அக்டோபர் மாதம் 11ம் தேதி செவ்வாய்கிழமை புதன் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
வியாழன், 20 அக்டோபர், 2011
சென்னையில் உதயதின விழா
எழிச்சிமிகு உதயதின விழா
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் நமது உயிரினும் மேலான
சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்சுல்வுஜூத்
ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் 76 - ஆவது
உதய தின விழா மிக சிறப்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
தலைமையகத்தில் உள்ள பரக்கத் நிஸா நினைவரங்கத்தில் 09/10/2011
(ஞாயிற்றுக்கிழமை) அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
விழாவுக்கு சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்கள்
தலைமை தாங்கினார்கள்.
நமது ஷைகு நாயகமவர்களின் கலீபாக்கள் முன்னிலை வகித்தார்கள்.
மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரியில் ஸனது பெற்ற
மௌலவி.குலாம் காதிரி யாசினி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் கிராஅத்
ஓதினார்.அதற்க்குப்பின் கஸிதத்துல் அஹமதிய்யா கஸிதத்துல் அவ்னிய்யா
ஒதப்பட்டன.கலீபா Adv.M. பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்
வஹ்ததுல் வுஜூத் பாடலைப் பாடினார்.
கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார்.
சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்களின்
தலைமையுரையோடு விழாச் சொற்பொழிவுகள் தொடங்கின. கண்ணியத்திற்குரிய
யாஸீன் அலி மௌலானா அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரியின் முதல்வர்
ஜனாப். மக்தூம் ஜான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் உரை ஆற்றினார்.
எமனேஸ்வரம் சூபி அப்துல் கறீம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்
சிறப்புரையாற்றினார்.
நிறைவாக, P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நன்றியுரை
ஆற்றினார்.
விழா நிறைவாக, சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்கள்
துஆ ஒதினார்கள் லுஹர் தொழகைக்குப்பின் அனைவருக்கும் கந்தூரி உணவு
வழங்கப்பட்டது,வந்தவர்கள் அனைவருக்கும் நமது ஷைகு நாயகமவர்களின்
நினைவாக நினைவு பரிசும் இனிப்பும் வழங்கப்பட்டன.
இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.