எழிச்சிமிகு உதயதின விழா
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் நமது உயிரினும் மேலான
சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்சுல்வுஜூத்
ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் 76 - ஆவது
உதய தின விழா மிக சிறப்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
தலைமையகத்தில் உள்ள பரக்கத் நிஸா நினைவரங்கத்தில் 09/10/2011
(ஞாயிற்றுக்கிழமை) அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
விழாவுக்கு சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்கள்
தலைமை தாங்கினார்கள்.
நமது ஷைகு நாயகமவர்களின் கலீபாக்கள் முன்னிலை வகித்தார்கள்.
மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரியில் ஸனது பெற்ற
மௌலவி.குலாம் காதிரி யாசினி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் கிராஅத்
ஓதினார்.அதற்க்குப்பின் கஸிதத்துல் அஹமதிய்யா கஸிதத்துல் அவ்னிய்யா
ஒதப்பட்டன.கலீபா Adv.M. பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்
வஹ்ததுல் வுஜூத் பாடலைப் பாடினார்.
கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார்.
சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்களின்
தலைமையுரையோடு விழாச் சொற்பொழிவுகள் தொடங்கின. கண்ணியத்திற்குரிய
யாஸீன் அலி மௌலானா அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரியின் முதல்வர்
ஜனாப். மக்தூம் ஜான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் உரை ஆற்றினார்.
எமனேஸ்வரம் சூபி அப்துல் கறீம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்
சிறப்புரையாற்றினார்.
நிறைவாக, P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நன்றியுரை
ஆற்றினார்.
விழா நிறைவாக, சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்கள்
துஆ ஒதினார்கள் லுஹர் தொழகைக்குப்பின் அனைவருக்கும் கந்தூரி உணவு
வழங்கப்பட்டது,வந்தவர்கள் அனைவருக்கும் நமது ஷைகு நாயகமவர்களின்
நினைவாக நினைவு பரிசும் இனிப்பும் வழங்கப்பட்டன.
இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக