சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைமை உரையாக Adv.M.பீர் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் நபி இபுராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை),நபி (ஸல்) ஆகியோர்களின் உயர்வு பற்றி உரை நிகழ்த்தினார்.
ஆலீம் சேக் ஃபரீத் யாசினீ ஹக்கியுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்
Adv.மீர் ஜவ்வாது ஹக்கியுல் காதிரி அவர்கள் குர்பானியின் உண்மையான தாற்பரியம்,தான் என்ற அகந்தையையும்,எனக்கு என்ற பேராசையும் விட்டுவிடுவது தான் குர்பானியின் உண்மையான நோக்கம் என்று உரையாற்றினார்.
அப்துல் பாசித் ஹக்கியுல் காதிரி அவர்கள் தன்னை அறிந்தவன் அறிவாளி,அல்லாஹ்வை பற்றி அறிந்து கொள்ள குரு காட்டாயம் தேவை,அவர்களால் மட்டுமே ஈடேற்றம் கிடைக்கும் என்று உரையாற்றினார்.
சுபுஹானி ஹக்கியுல் காதிரி அவர்களால் ஞானப்பாடல் பாடினார்.
திவான் அப்துல் காதர் ஹக்கியுல் காதிரி அவர்கள் குருவில் சரண் அடைவது ஞானத்தின் முதற்படி,குருவில் அதிக அன்பு வைப்பது நம்மை மேன்மை அடையச் செய்யும் என்று உரை நிகழ்த்தினார்.
----------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்கள் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு தன்னிடமுள்ள குறைகளை அகற்றி விடுவது தான் சிறந்த வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்.
காதர் மீரா கனி ஹக்கியுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகம் தன்னை நம்பி,தன்னை அண்டிய பிள்ளைகளை பக்குவபடுத்தி ஹக்கிலே சேர்க்கிறார்கள் எனவே நாம் குருவிலே முழுவதும் ஒப்படைக்க வேண்டும் என்று உரையாற்றினார்.
காஞ்சி யூசுப் ஹக்கியுல் காதிரி அவர்கள் பெரியாரை துனை கோடல் என்ற திருக்குறள் அத்தியாயத்தில் குருவின் அவசியம்,முக்கியம்,நன்மை என்பதை தெளிவாக அறிய முடியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக