வெள்ளி, 1 அக்டோபர், 2010

திருச்சியில் 75வது உதயதினவிழா










திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமீஆ யாசீன் அறபுக்கல்லூரியில் சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸ்_ல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 75வது உதயதின விழா 25.09.2010 சனிக்கிழமை காலையில் 9.30 மணிக்கு மிக சிறப்புடன் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு கண்ணியமிக்க மசூது மௌலானா அவர்கள் தலைமைத் தாங்கினார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக திருச்சி மதரஸா மாணவர் கிராஅத் ஓதி துவங்கினார்கள்.
அவர்களைத் தொடந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை கலீபா Adv. பீர் முஹம்மது ஹக்கியுல்காதிரி, பாடினார்கள்.ஞானப்பாடலை கலீபா உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்கள் பாடினார்கள்.புகழ்பாடலை கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல்காதிரி, பாடினார்.
வாழ்த்துரையாக ஹாஜா மொய்தீன் ஹக்கியுல்காதிரி நிகழ்த்தினார்.விழாத்தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார்.
அதைத் தொடந்து கலிபாக்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
கலீபா ஹபிபுல்லாஹ் ஹக்கியுல்காதிரி,
கலீபா அப்துல்காசிம் ஹக்கியுல்காதிரி,
கலீபா தியாகி சிராஜ்தீன் ஹக்கியுல்காதிரி,
கலீபா முஹம்மது காலீது ஷா ஹக்கியுல்காதிரி,
கலீபா உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி,
கலீபா அட்வகேட் லியாகத்அலி ஹக்கியுல்காதிரி,
கலீபா மதுரை உமர் ஹக்கியுல்காதிரி,
மற்றும் தளபதி இராவுத்தர்ஆகியோர் இவ்விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.
J. ரஹமத்துல்லா ஹக்கியுல்காதிரி நன்றி உரை நல்கினார்.லுஹர் தொழகைக்கு பின் மதிய உணவு வழங்கப்பட்டு இறுதியாக கஸிதத்துல் அஹ்மதிய்யா,கஸிதத்துல் அவ்னிய்யா ஒதி துஆவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. பல ஊர்களிலிருந்தும் முரீதுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக