சனி, 23 அக்டோபர், 2010
புனித இராத்திபு நிகழ்ச்சி 21-10-2010
சென்னை மாதாந்திர கூட்டம் 17-10-2010
கலிபா Adv. அப்துல் ரவூப் அவர்கள் ஜிவாத்மா,பரமாத்மா,ஹக்கை மறைக்கும் திரை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------
Dr.Prof.குலாம் முஹம்மதுஅவர்கள் தன்னுள்ளும் இறை உள்ளது என்பதை உணர வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
பன்னாமம் பூண்டாலும் பரமாவதொன்று
தன்நாம்ம துறந்தாலும் பரமா வதொன்று
இதன் விளக்கமளித்து உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்
செவ்வாய், 5 அக்டோபர், 2010
எழில்மிகு 75வது உதயதினவிழா
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸூல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 75ஆவது உதயதின விழா
அக்டோபர் மாதம் 03-10-2010 9.30 மணியளவில் விழா ஆரம்பமானது.
இவ்விழாவிற்க்கு மூத்த ஆத்ம சகோதரர் Dr.Er.முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
முதலாவதாக ஆலிம் A.பக்கிர் முஹம்மது கிராஅத் ஒதினார்.
கஸிதத்துல் அஹ்மதிய்யா,கஸிதத்துல் அவ்னிய்யா
ஒதும் நிகழ்ச்சிDr.Prof.M.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
கலீபா Adv.M.பீர் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வஹ்தத்துல் வுஜூது பாடல் பாடினார்.
சங்கைமிகு செய்கு நாயகத்தின் 75ஆவது உதயதின விழாவை முன்னிட்டு நிதி உதவி ஆத்ம சகோதரர் ஆயத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிவகாசி தலைமை ஆசிரியர் (ஒய்வு) ஆத்ம சகோதரர் மக்தும் ஜான் ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கொச்சின் பஷீர் அஹமது ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மதுக்கூர் கலீபா அஹமது முஸ்தபா ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.பின் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.