திங்கள், 24 மே, 2010

“ காமூஸ் “ எனும் அறபு – தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழா









இமாம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மவ்லானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களால் தொகுத்து வடிவமைக்கப்பட்டகாமூஸ்எனும் அறபுதமிழ் அகராதி நூல்,21-05-2010( வெள்ளிக்கிழமை) அஸருக்கு பின்திருமுல்லைவாசல் சங்கை மிகு குத்துபுல் அக்தாப் குத்துபுல்பரீத் கெளதுல்வஜுத் ஜமாலிய்யா சையது யாஸீன் மவ்லானா அல் ஹசனிய்யுல் ஹாசிமிய் நாயகம் (ரலி) அவர்களின் தர்கா ஷரீஃபில் வைத்து வெளியிடப்பட்டது.

மதியம் ஜுமுஆத் தொழுகைக்குப் பின்னர், மதிய உணவு பறிமாறப்பட்டது.பின்னர் அஸருக்கு பின்,விழா தொடக்க நிகழ்ச்சியாக திருச்சியிலுள்ள நமது மதுரஸா மாணவர் ஹாபிழ்.V.M. முஹம்மது ஜகரிய்யா அவர்களின் கிராஅத்துடன் விழா கோலாகலமாகத் தொடங்கியது.

கலீஃபா. அட்வகேட்.பீர் முஹம்மத் அவர்கள்வஹ்ததுல் உஜூத்பாடலைப் பாட, அதனைத் தொடர்ந்து, கலீஃபா. ஆலிம்புலவர். ஹுஸைன் முஹம்மது அவர்கள் நபிப்புகழ் பா ஒன்றை இசைத்தார்கள்.

பின்னர், நூலை கலீஃபா.ஆலிம்புலவர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து சிறிது நேரம் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து, நூல் வெளியிடும் சிறப்பான நிகழ்ச்சி தொடங்கியது.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த திருச்சிதஞ்சை மாவட்டங்களுக்கான அரசு டவுன் காழியார் அல்ஹாஜ். மவ்லவி. ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ அவர்கள் முதல் பிரதியை வெளியிட, சங்கைக்குரிய ஸய்யித் மஸ்ஊத் மவ்லானா அல்ஹாதி அவர்கள், முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

இரண்டாம் பிரதியை சங்கைக்குரிய ஸய்யித் நூருல் அமீன் மவ்லானா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

மூன்றாம் பிரதியை சங்கைக்குரிய ஸய்யித் மஸ்ஊத் மவ்லானா அல்ஹாதி அவர்கள் வெளியிட திருச்சி – தஞ்சை மாவட்டங்களுக்கான அரசு டவுன் காழியார் அல்ஹாஜ். மவ்லவி ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

நன்றி உரையாக தலைமை கலீஃபா. H.M. ஹபீபுல்லாஹ் அவர்கள் உரை ிகழ்த்தினார்.

விழாவின் நிறைவாக சங்கைக்குரிய மஸ்வூத் மவ்லானா அல்ஹாதி அவர்கள் துஆ ஓதி துஆச் செய்தார்கள். இந்நிகழ்ச்சி அனைத்தையும் கிப்லா மாத இதழ் ஆசிரியர் N.S.N.அப்துல் ஸலாம் ஆலிம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாயகமவர்களின் கலீஃபாக்களும் முரீதீன்களும் மற்றும் உள்ளூர் ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக