சனி, 29 மே, 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி - 27-05-2010




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் வேளாச்சேரி முகைதீன் அப்துல் காதர் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. மே மாதம் 27-05-2010 ம் தேதி வியாழக்கிழமை வெள்ளி இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

திங்கள், 24 மே, 2010

“ காமூஸ் “ எனும் அறபு – தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழா









இமாம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மவ்லானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களால் தொகுத்து வடிவமைக்கப்பட்டகாமூஸ்எனும் அறபுதமிழ் அகராதி நூல்,21-05-2010( வெள்ளிக்கிழமை) அஸருக்கு பின்திருமுல்லைவாசல் சங்கை மிகு குத்துபுல் அக்தாப் குத்துபுல்பரீத் கெளதுல்வஜுத் ஜமாலிய்யா சையது யாஸீன் மவ்லானா அல் ஹசனிய்யுல் ஹாசிமிய் நாயகம் (ரலி) அவர்களின் தர்கா ஷரீஃபில் வைத்து வெளியிடப்பட்டது.

மதியம் ஜுமுஆத் தொழுகைக்குப் பின்னர், மதிய உணவு பறிமாறப்பட்டது.பின்னர் அஸருக்கு பின்,விழா தொடக்க நிகழ்ச்சியாக திருச்சியிலுள்ள நமது மதுரஸா மாணவர் ஹாபிழ்.V.M. முஹம்மது ஜகரிய்யா அவர்களின் கிராஅத்துடன் விழா கோலாகலமாகத் தொடங்கியது.

கலீஃபா. அட்வகேட்.பீர் முஹம்மத் அவர்கள்வஹ்ததுல் உஜூத்பாடலைப் பாட, அதனைத் தொடர்ந்து, கலீஃபா. ஆலிம்புலவர். ஹுஸைன் முஹம்மது அவர்கள் நபிப்புகழ் பா ஒன்றை இசைத்தார்கள்.

பின்னர், நூலை கலீஃபா.ஆலிம்புலவர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து சிறிது நேரம் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து, நூல் வெளியிடும் சிறப்பான நிகழ்ச்சி தொடங்கியது.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த திருச்சிதஞ்சை மாவட்டங்களுக்கான அரசு டவுன் காழியார் அல்ஹாஜ். மவ்லவி. ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ அவர்கள் முதல் பிரதியை வெளியிட, சங்கைக்குரிய ஸய்யித் மஸ்ஊத் மவ்லானா அல்ஹாதி அவர்கள், முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

இரண்டாம் பிரதியை சங்கைக்குரிய ஸய்யித் நூருல் அமீன் மவ்லானா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

மூன்றாம் பிரதியை சங்கைக்குரிய ஸய்யித் மஸ்ஊத் மவ்லானா அல்ஹாதி அவர்கள் வெளியிட திருச்சி – தஞ்சை மாவட்டங்களுக்கான அரசு டவுன் காழியார் அல்ஹாஜ். மவ்லவி ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

நன்றி உரையாக தலைமை கலீஃபா. H.M. ஹபீபுல்லாஹ் அவர்கள் உரை ிகழ்த்தினார்.

விழாவின் நிறைவாக சங்கைக்குரிய மஸ்வூத் மவ்லானா அல்ஹாதி அவர்கள் துஆ ஓதி துஆச் செய்தார்கள். இந்நிகழ்ச்சி அனைத்தையும் கிப்லா மாத இதழ் ஆசிரியர் N.S.N.அப்துல் ஸலாம் ஆலிம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாயகமவர்களின் கலீஃபாக்களும் முரீதீன்களும் மற்றும் உள்ளூர் ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வியாழன், 20 மே, 2010

சென்னை மாதாந்திரக் கூட்டம் 16-05-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.
முதலவதாக கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்
அதற்குபின் கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.

------------------------------------------------------------------------------------------------------------


கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் படைப்பின் நோக்கம் இறையை அறிவது என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-----------------------------------------------------------------------------------------------------------


Dr.இஞ்சினியர் முகையத்தின் அவர்கள் இராத்திபு கிதாபில் உள்ள திக்ருகளின் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------------------


இஞ்சினியர் ஹைதர் நிஜாம் அவர்கள் மன்னிப்பு,மனித நேயம்,உழைப்பு,குருதட்சனை என்ற
தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------



கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் குத்துபுல் மத்ஹரி மஹானந்த பாவா,நமது ஷெய்கு நாயகத்தின் உயர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி



தவ்பா பைத்து ஓதி அஸர் தொழுகைக்கு பின் தப்ருக் வழங்கி கூட்டம் நிறைவு பெற்றது.

ஞாயிறு, 2 மே, 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி - 29-04-2010





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் P.ஹாஜாமுகையதீன் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. ஏப்ரல் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமை வெள்ளி இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.