செவ்வாய், 22 டிசம்பர், 2015

புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 11 - 22.12.2015

சேற்றிற் காற்ப திந்தென
      செம்மை யான பாறைமேற்
காற்ப தித்த பூபதி
      கருணை நாத ரெம்நபி.

புனித மௌவ்லித் மஜ்லிஸ், ஜனாப் திவான் அப்துல் காதிர் அவர்களின் இல்லம் மண்ணடி, சென்னை.









புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 10 - 21.12.2015

அத்த மித்த கதிரவ
         னான சுத்த சோதியை
       வித்தை யாக விண்ணுயர்
       மீட்டி வைத்தார் மாநபி

புனித மௌவ்லித் மஜ்லிஸ், ஜனாப் S.B.ஆஷிப் அவர்களின் இல்லம் புரசைவாக்கம், சென்னை.















திங்கள், 21 டிசம்பர், 2015

மாதாந்திர கூட்டம் மற்றும் புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 9 - 20.12.2015

மதிபி ளந்த மாநபி
                மண்ணில் வந்த மாமதி
   பதியின் மிக்க மாபதி
                                     மறைகொ ணர்ந்த சீர்நபி.

புனித மௌவ்லித் மஜ்லிஸ், ஜனாப் காதர் மீரா கனி அவர்களின் இல்லம் முத்தமிழ் நகர், சென்னை.










சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாந்திர கூட்டம் 20.12.2015 அன்று நடைபெற்றது. கூட்டத்தை சென்னை சபையின் செயலாலர் ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தலைமை வகித்து நடத்திவைதார்கள். கூட்டத்தின் ஆரம்பமாக முகம்மது ஹாருன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் கிராஅத் ஒதினார்கள். அதன் பிறகு சுப்ஹானி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஏகாந்த கீதம் பாடினார்கள். தொடர்ந்து ஆத்ம சகோதரர்கள் உறையாற்றினர்கள்.

P. ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


திவான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


ஜிபைர் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


ஜமால் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்


சுப்ஹானி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்





புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 8 - 19.12.2015

குழந்தைப் பருவம் தன்னிலே
             குறையி லாத குரிசிலை
   வழியிற் கூட்டிச் செல்கையில்
               வாழ்த்துக் கூறு மாமெலாம்.
குரிசில் : தலைவர், பெருமை மிக்கவர்


புனித மௌவ்லித் மஜ்லிஸ், ஜனாப் ஜமால் அவர்களின் இல்லம் ஐய்யப்பாக்கம், சென்னை.











புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 7 - 18.12.2015

அண்ண லார்பி  றந்தனர்
அன்று கிஸ்ரா மாளிகை        
 மண்ணில் வீழ்ந்த ழிந்தது
          வல்ல வன்றன் கிருபையால்.

ஜனாப் யாகுப் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற புனித மௌவ்லித் மஜ்லிஸ், M.R.நகர், சென்னை.









வியாழன், 17 டிசம்பர், 2015

புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 5

பதிபி றந்த போதினிற்
பார சீகந் தன்னிலே
அதியெ ரிந்து வந்ததீ
அணைந்த தண்ணல் புதுமையே.

ஜனாப் சுப்ஹானி அவர்களின் தோழ் மண்டி, பெரியமேடு, சென்னை.

புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 6

வணங்கு தெய்வச் சிலையெலா
மசைந்து கீழ்வி ழுந்தன
குணங்கு ளிர்ந்த திங்களார்
குவல யத்து தித்ததால்.


ஜனாப் பஷீர் அவர்களின் இல்லாம், புரசைவாக்கம், சென்னை.






புதன், 16 டிசம்பர், 2015

புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 3

நபிபி றந்த போதினில்
நலங்கு றைந்த நாடிது
தபமொ ழிந்து வளமிகத்
தண்மை கொண்டொ ளிர்த்ததே.

ஜனாப் சிராஜுத்தீன் அவர்கள் இல்லம், புரசைவாக்கம், சென்னை.