சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாதிந்திர கூட்டம் 30-09-2014 அன்று நடைபெற்றது. .கூட்டத்தின் ஆரம்பமாக கிராஅத் ஒதி அதற்க்குப்பின் ஏகாந்த பாடல் பாடபட்டது. P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் நற்செயல்கள் வணக்கமாக மாற்றப்படுகிறது என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார். அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இஸ்லாத்தின் உயர்வானது ஞானம்தான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருவுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் அதுவே மிகவும்
நல்லது என்று உரை நிகழ்த்தினார்.
குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது உடலே ஒரு பிரபஞ்சமே அனைத்து
அம்சங்களும் உடலிலே அடங்கியுள்ளது என்று உரை நிகழ்த்தினார்
ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குர்பானி என்பது குருவிலே முழுமையாக
பனா ஆவது ஆகும் என்று உரை நிகழ்த்தினார்
இறுதியாக தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகையுடன் தப்ருக் உடன் இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக