சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் சலாஹூதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
வீட்டில் ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதம் பிறை 14ல் (ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வியாழன்
பின்னேரம் வெள்ளி இரவு)மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல்
காதிரிய்யா ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள்
பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்
தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது
வியாழன், 29 ஆகஸ்ட், 2013
மாதாந்திர கூட்டம் -18-08-2013
சென்னை
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் ஆகஸ்ட் மாதம் 18அம் தேதி கூட்டம்
நடைபெற்றது.கிராஅத் அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒத ஏகாந்த பாடல்
சுபுஹானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.
அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாயகம் (ஸல்) அலைவஹிவஸ்ஸிம் அவர்கள் இல்லையானால் எவ்வாறு நாம் இறைவனை அறிந்திருக்க முடியாதோ,அவ்வாறே நமது ஷெய்கு நாயகம் இல்லையானால் ஞானம் நமக்கு கிடைத்திருக்காது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தினமும் ஒருமுறையாவது ஸலவாத் சொல்லுங்கள் என ஷெய்கு நாயகம் கூறுகிறார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மீர்ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தன்னை அறிவதே-ஞானம், சூபிஸம்- இன்பம்,துன்பம் இரண்டையும் சலனமற்ற நிலையில் மனே நிலையை ஒரு நிலைப்படுத்தும் அனுபவ பயிற்சியாகும் என்று உரையாற்றினார்.
இப்ராஹிம் கலில் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தாயாகவும்,தந்தையாகவும் நமது ஷெய்கு நாயகம் வழிகாட்டி நமது தேவையாணதை நாம் கேட்காமலே தருகிறார்கள் என்று உரையாற்றினார்.
சலாவுதீன ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகத்தில் சொல் அப்படியே நடக்கும் என்பதற்கு என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளே உதாராணமாகும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் உங்கள் உடலிலும் தன்மையிலும் எண்ணத்திலும் நப்ஸிலும் அல்லாஹ் இருக்கிறான் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தஃபா பைத் ஒதி அஸர் தொழுகைக்குப்பின் துஆ ஒதி தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)