செவ்வாய், 28 மே, 2013

மாதாந்திர கூட்டம் -19-05-2013

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் மே மாதம் 19அம் தேதி 

கூட்டம் நடைபெற்றது.கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல்

 காதிரி அவர்கள் ஒத ஏகாந்தபாடல் Prof.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி 

அவர்கள் பாடினார்.

 தலைமை உரையாக ஹாஜா முகையதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஹக்கை பற்றிய அறிவை பரப்புவதற்காகவே நமது ஷெய்கு நாயகம் இங்கு வருகிறார்கள் என்று உரையாற்றினார்.

 மெளலவி பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஹூப்புன் நபியுக்கும்,வஹூப்பு அஹ்லுல்பைத்தி,வகிராஅத்துல் குர்ஆனி ஆகிய முன்றையும் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள் என்று நபி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னதாக அலி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று உரையாற்றினார்.


இபுறாகிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் அல்லாஹ் பரிபூரணமானவன்,முழுபிரபஞ்சமும் அல்லாஹ்வாகவே உள்ளது இதில் கூடுதல்,குறைதல் இல்லை என்று உரையாற்றினார்.


 முஹம்மது சலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது மதரஸாவுக்கும,நமது சபைக்கும் நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும்.நமது அறியா புறத்திலிருந்து நன்மைகள் கிடைக்கும் என்று உரையாற்றினார்.



அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் அல்லாஹ்வை பற்றி அறிந்து கொள்வதற்கும் ஞானத்தை விளங்க அதைப்பற்றி பேச,சிந்திக்க செய்யவே மாதந்திரக்கூட்டம் நடைபெறுகிறது என்று உரையாற்றினார்.


 புஹாரி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நான் அறிவிலிருந்து உள்ளேன்,அறிவு நாட்டத்தின்றுமுள்ளது.நாட்டம் வெண்முத்திலின்றும் உள்ளது-நமது ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களுக்கு காலம்,இடம் என்ற மட்டு இல்லை பரிபூரணமாகவே உள்ளார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.







தெளபா பைத்து ஒதி அஸர் தொழுகைக்குப்பின் துஆ ஒதி தப்ருக் வழுங்கி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

வியாழன், 2 மே, 2013

புனித இராத்திபு நிகழ்ச்சி – 25-04-2013






சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் S.I. தவ்லத் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1434 ஜமாதுல் ஆகிர் பிறை 14ல் ஏப்ரல் மாதம் 25ம் தேதி வியாழன் பின்னேரம் (வெள்ளி இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

மாதாந்திர கூட்டம் -21-04-2013


சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் ஏப்ரல் மாதம் 21அம் தேதி கூட்டம் நடைபெற்றது.கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒத ஏகாந்த பாடல் ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.

தலைமை உரையாக கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் 
நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பிறப்பு,கராமத்துக்கள் என்ற
தலைப்பிலும்,விடாமுயற்சி வெற்றி நிச்சயம் என்ற தலைப்பிலும் 
உரையாற்றினார்.

அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூலை உகப்பது 
பிரபஞ்சத்தையே உகப்பதாகும்,பிரபஞ்ச சுழற்சியே ரசூலியத்தில் உள்ளது 
என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூலுள்ளாஹ் காலத்தில் 
ஷகாபாக்கள் எவ்வாறு ஈர்க்கப்பட்டார்கள் அதேபோல் நமது ஷெய்கு 
நாயகத்திடம் முரீதுகள் ஈர்க்கப்படுகிறார்கள் என்ற தலைப்பில் 
உரையாற்றினார்.

Er.அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகத்தின் பொன் 
மொழிகள்: வாழக்கூடிய வலிமார்கள் அதிகமானோர் நமது முரீது பிள்ளைகள்,
இந்த ஸமானில் நம்மை அண்டியோர் பெரும்பேறு பெற்றவர்கள் என்ற 
தலைப்பில் உரையாற்றினார்.

ஹாஜா முகையதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கலிமாவை 
பரப்புவதற்காகவே நாம் இந்தியா வருகிறோம் அதாவது ஞானத்தை 
பரிபூரணமாக விளக்குவதற்காகவே நாம் வருகிறோம் என்ற 
உரையாற்றினார்.



தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்கு பின் துஆவுடன் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.