செவ்வாய், 12 ஜூலை, 2011

சென்னை மாதாந்திர கூட்டம் - 10-07-2011

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஜீலை மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ஹாஜா முஹையதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார். மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்.அதற்க்குப்பின் Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி மற்றும் Dr.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்தப்பாடல்கள் பாடினார்கள்.
-------------------------------------------------------------------------------------------

Er.அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஹக்கை பரிபூரணமாக உணர்ந்த மஹான்களைக் கொண்டே நாம் ஈடேற்றம் பெற முடியும் என்று உரையாற்றினார்.

---------------------------------------------------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருநாதரிடம் முரீதுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.
------------------------------------------------------------------------

Adv.மீர் ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் உயர்வு,அகமியம்,ஆகியவற்றை விளங்க வேண்டும் என்று உரையாற்றினார்.

---------------------------------------------------------------------

மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அலைஹிவஸ்ஸல்லம்

அவர்கள் வழிமுறைகளை நமது ஷெய்கு நாயகம் அவர்கள் நமக்கு புரியும் வண்ணம் எளிமையாக சொல்லித் தருகிறார்கள் என்று உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------

Prof.இப்ராஹீம் கலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “கலப்பற்ற முரீதுகளின் உள்ளத்தில் எனக்கு கூடாரம் உண்டு என்ற அமுத மொழிகளை ஒவ்வொருவரும் அனுபவபூர்வமான உணர்ந்து கொண்டே இருப்பார்கள் என்று உரையாற்றினார்.

-----------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்



தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக