வெள்ளி, 20 மே, 2011

சங்கைமிகு ஷைகுனா இந்தியா வருகை















ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும், கண்மணிநாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை)அவர்களின் திரு குடும்பத்தினருமான சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் ஆன்மீக சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு மே மாதம் 19ம் தேதி 2011 வியாழக்கிழமை மதியம் திருச்சி விமான நிலைத்தில் வருகை புரிந்தார்கள்.

விமானநிலையத்தில் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மெளலானா

அவர்களை மெளலானாமார்களும்,கலிபாக்களும்,முரீதீன்களும் வரவேற்றனர்.

பின்னர் சங்கைமிகு நாயகம் அவர்கள் திருச்சியில் உள்ள நமது மதரஸாவிற்கு வருகை புரிந்தார்கள்.

மதரஸாவில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ள அவ்னிய்யா கம்யூட்டர் மையத்தை பார்வையிட்டார்கள்.

பின்னர் சங்கைமிகு நாயகம் அவர்கள் நமது மதரஸாவில் முரீதீன்கள்,மதரஸா மாணவர்கள்,

மதரஸா ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றி அருளாசி வழங்கினார்கள்.

இப்புனித நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக