திங்கள், 1 மார்ச், 2010

இலங்கை வெலிகமையில் மீலாதுப் பெருவிழா




இலங்கைவெலிகமையில் கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ரஸூலேகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தின விழா மிகச் சிறப்புடன் பிப்ரவரி 26 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் துவங்கப்பட்டு ரசூல் மாலை ஓதப்பட்டது.
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கத்தார், குவைத் மற்றும் அமீரகம் துபையிலிருந்து பல இஸ்லாமியர்கள் இந்நிகழ்ச்சியை கௌரவிக்கும்முகமாக வருகை புரிந்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிப்ரவரி 27 மாலை சிறப்புவிருந்தினராக "இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் இந்திய பாரளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர்மைதீன் எம்.ஏ" அவர்களும் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் மாநில மார்க்க அணிச்செயலாளர் தளபதி ஷபிக்குர்ரஹ்மான் அவர்களும் இலங்கை வெலிகம சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல்அவுன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் திரு இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளர்கள்.
மஃரிப் தொழுகைக்குப்பின் சங்கைமிகு கலீல்அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் நடைப்பெற்ற இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா (இராத்தீபு மஜ்லீஸ்)நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.

மீலாதுன்னபி விழாவில் அரபு-தமிழ் அகராதி வெளியீடு
இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுன்னபி பெருவிழாவில் சிறப்பம்சமாக குத்புல்பரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்களால் தூயத் தமிழில் எழுதப்பட்ட அரபு-தமிழ் அகராதி வெளியிடப்பட்டது. சுமார்45 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இவ்வகராதி அவர்கள் மகனார் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல்ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்களின் அயராத முயற்சியின் பேரில் பல நவீன கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டு கண்மணிநாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில் வெளியீடப்படுவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.இவ்வகராதியை சிறப்புமிகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய செயலாளரும் அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைய்தீன் அவர்களால் வெளியீடப்பட்டது.இரண்டாம் பிரதியை சங்கைமிகு இமாம் கலீல் அவுன் மௌலானா அவர்கள் இலங்கை மகாண கவர்னர் அஸ்ஸையது அலவி மௌலானா அவர்களின் அன்பு புதல்வருக்கு வழங்கினார்கள்.மாலை சங்கைமிகு இமாம் கலீல் அவுன் மௌலானா அவர்களின் அருள்மொழிக்கோர்வையான மனிதா என்ற நூலும் ஆத்மீக சகோதரர் மதுக்கூர் கலீபா அட்வகேட் லியாகத்அலி அவர்கள் மறைஞானப்பேழை மாதப்பத்திரிக்கையில் இருபது ஆண்டுகளாக கேள்வி பதில் பகுதியில் பதிலளித்து வந்த மெய்யொளி பதில்கள் நூலாக வெளியீடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக