சென்னை
ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் கலிபா அட்வகேட் அப்துல் ரவூப் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலிபா அட்வகேட் அப்துல் ரவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.
முதலவதாக
மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள் அதற்குபின் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
தலைமை உரையாக
கலிபா அட்வகேட் அப்துல் ரவூப் அவர்கள்
முகம்மது நபி (ஸல்) அவர்கள் அருட்கொடை என்று உரையாற்றினார்.
இஞ்சினியர் ஹைதர் நிஜாம் அவர்கள் இலங்கை வெலிகாமாவில் நடந்த மீலாது விழா நிகழ்ச்சியை பற்றி உரையாற்றினார்.
காஞ்சி முகம்மது யூசுப் அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்கள்
மீது முஹப்பது வைத்தால் என்ன நன்மை என்று உரையாற்றினார்.
Dr.குலாம் முகம்மது அவர்கள் ஸலாவத்தின் மகிமை,குருவின் மூலம் மட்டுமே இறையை அடைய முடியும் என்று உரையாற்றினார்.
திண்டுக்கல் ரஹ்மத்துல்லா அவர்கள் சிங்கப்பூரில் வாப்பா நாயகத்துடன் இருந்த நிகழ்சியை பற்றி உரையாற்றினார்.
Dr.இஞ்சினியர் முகையத்தின் அவர்கள் முகையத்தின் ஆண்டகையின் உச்ச நிலையை பற்றி உரையாற்றினார்.
இறுதியாக
மாஹாதீர் அவர்கள் இந்த காலத்துக்கு ஏற்றவாறு விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தவ்பா பைத்து ஓதி அஸர் தொழுகைக்கு பின் தப்ருக் வழங்கி கூட்டம் நிறைவு பெற்றது.