புதன், 23 டிசம்பர், 2009

சென்னை மாதாந்திரக் கூட்டம் : 20 – 12 –2009


சென்னை மாதாந்திரக் கூட்டம்

நாள்: 20 – 12 –2009

இடம் : எம். ஆர். & கோ

தலைமை : தலைமை கலிஃபா H.M. ஹபிபுல்லாஹ்

____________________________________________________________


கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.



_____________________________________________________


தலைமை கலீஃபா H.M. ஹபிபுல்லாஹ் அவர்கள், தீனுல் இஸ்லாம், குருவின் நாட்டத்தால் மட்டுமே ஜெயம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.


______________________________________________________



கலீஃபா பீர்முகம்மது அவர்கள், ஷெய்கு நாயககத்தின் உயர்வு, குருவில் ஃபனா, உலக அறிவு ஞான அறிவு ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.


______________________________________________________________



அப்துல் பாஸித் அவர்கள், ஹஜ் பெருநாள், பதுரு யுத்தம், கர்பலா யுத்தம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

____________________________________________________________


மௌலவி பக்கீர் முகமது ஆலீம் அவர்கள், நாஜூத், லாஹுத், இமாம் அபுஹனிஃபா ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

_____________________________________________________________


மாதாந்திரக் கூட்டதி்ல் கலந்து கொண்ட ஆத்ம சகோதரர்கள்


_____________________________________________________________

தெளபா பைத்துடன், இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.
********************************************************************************

திங்கள், 14 டிசம்பர், 2009

ராத்திப் நிகழ்ச்சி 01/12/2009

ராத்திப் நிகழ்ச்சி

இடம்: திவான் அப்துல் காதர் வீடு.





புதன், 18 நவம்பர், 2009

சென்னை மாதாந்திரக் கூட்டம் : 15 – 11 –2009


சென்னை மாதாந்திரக் கூட்டம்

நாள்: 15 – 11 –2009

இடம் : கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடூ

தலைமை: கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட்


__________________________________________

மௌலவி பக்கீர் முகமது ஆலீம் அவர்கள்

கிராஅத் ஓதி கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.




_________________________________________________________

அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் இறையருட்பா பாடல்களுடன்
தலைமை உரையாற்றினார். பி்ன் சபையின் நோக்கம், தெளிவான
சிந்தனை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.





____________________________________________________________

ஹைதர் நிஜாம், சேமிப்பு மற்றும் விஞ்ஞானமும், மெஞ்ஞானமும்
ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்





_______________________________________________________________

முகமது சலாவுதீன், தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள்,
அதை நீக்கிய நமது ஷெய்கு நாயககத்தின் கராமத்துக்களை பற்றி உரையாற்றினார்.






__________________________________________________________.

ஜாகிர் உசேன், மனிதனி்ன் இரகசியம் என்ற தலைப்பில்

உரையாற்றினார்.





____________________________________________________________

ஹாஜாமுகையதீன், ஃபனாபிஸ் ஷெய்கு, வஹ்தத்தில்

வுஜீது என்ற தலைப்பில் உரையாற்றினார்.





_________________________________________________

தெளபா பைத்துடன், இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது..




புதன், 11 நவம்பர், 2009

-புனித விசால்தின நிகழ்ச்சி - 2009

குத்துபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஷூசைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 45வது வருட விசால் கந்தூரிதினம் 4/11/2009 புதன் மாலை வியாழன் இரவு சங்கை மிகு ஷெய்கு நாயகம் குத்துபுஸ்ஸமான் ஸம்ஷூல் வுஜுது ஜமாலிய்யா ஸய்யது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஹிமிய் தலைமையில் மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.







மெளலிது, ராத்திபு, துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது...

திங்கள், 2 நவம்பர், 2009

செவ்வாய், 20 அக்டோபர், 2009

- வாப்பா நாயகம் -

சையது கலீல் அவ்ன் மௌலானா

ஜமாலிய்யா சையது கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல்
ஆஷிமிய் நாயகமவர்கள் நபிகள் நாயகம் ( ஸல் அலை) அவர்களின் பரிசுத்தமான திருக்குடும்பத்தில் 34ம் தலைமுறைத் தோன்றலாகவும் வலிகள் கோமான் கௌதுல் அஉலம் முஹியுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் 21-ம் தலைமுறையாய் உதித்தவருமாவார்கள்.
அரபு மொழியில் இவர்கள் இயற்றியுள்ள பேரின்பப்பாக்கள் இவர்களின் அரபுமொழிப் புலமையையும் ஆன்மீக உச்சத்தையும் புலப்படுத்தும். தமிழ்மொழியில் இவர்கள் பெற்றிருக்கும் புலமையோ வார்த்தைகளால் வடிக்க முடியாதது. சங்ககாலப் புலமையை இவர்களின் தமிழ் ஆக்கங்களில் காணமுடியும். தமிழுக்கு ஒரு புதிய பிரபந்தத்தையே தோற்றுவித்துத் தந்த நாயகர் பன்னிருபாடல் இசித்திரக் கவிகளால் அலங்கரிக்கப்பட்ட மகானந்தாலங்காரமாலை இலங்கைச் சாகித்திய மண்டலத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழ வள நாட்டில் பயிர்பெருக்க வாரீர் இறைவலிய் செய்யிது முஹம்மது மௌலானா போன்ற கவிதை நூற்களில் இவர்களின் யாப்புத் திறனையும் ஆழமான கவிதையாற்றலையும் காணமுடியும். ஞானம் என்றால் என்னவென்று அறிய துடிப்பவர்களுக்கு அறிமுக நூலாக எழுதப்பட்ட பேரின்பப்பாதையும் ஹகாயிகுஸ்ஸபா துற்பதுல் முர்ஸலா போன்ற அரபு நூற்களுக்கு எழுதிய விளக்கமும் தமிழ் முஸ்லிம் உலகுக்கு இவர்கள் அளித்த ஞானப் புதையல்களாகும்.முழுக்க முழுக்க ஞானத்தையே கருப்பொருளாகக் கொண்டு வெளிவரும் மாத இதழ் ஒன்றை மறைஞானப்பேழை என்ற பெயரில் வெளியிடச் செய்துள்ளார்கள். இவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையானது இலங்கை இந்தியா இசிங்கப்பூர் இமலேசியா துபாய் குவைத் கத்தார் போன்ற நாடுகளில் இயங்கிவருகிறது.இவர்களின் ஞான வழிகாட்டல் குர்ஆன்இ ஹதீஸின் அடிப்படையிலானது




ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா ( தந்தை )


குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌளானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் இவர்களின் தந்தையாவார்கள். அவுன் நாயகமவர்கள் தங்கள் தந்தையாரிடமே அரபிக் கல்வியையும் ஆன்மீகக் கல்வியையும் முழுமையாகப் பயின்று அவர்களின் ஆன்மீக வாரிசாகத் திகழ்கிறார்கள். அவர்கள் தோற்றுவித்த அத்தரீகதுல் ஹக்கியதுல் காதிரிய்யா வெனும் லஜ்னதுல் இர்பானித் தவ்ஹீத் (ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை) ஏற்படுத்தி மக்களுக்கு ஆன்மீக அறிவூட்டும் ஒப்பற்ற காமில் ஷெய்காக விளங்குகிறார்கள்…


கௌதுஸ்ஸமான் ஜமாலிய்யா மௌலானா ( பாட்டனார் )
இவர்களின் பாட்டனார் கௌதுஸ்ஸமான் ஜமாலிய்யா மௌலானா அவர்கள் பகுதாதிலிருந்து இந்தியா வந்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானம் பரப்பி தமிழகத்திலுள்ள சம்பைப்பட்டினத்தில் அடக்கமாயுள்ளார்கள். புகாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதியவர்களும் அரபு-அரபுத்தமிழ் அகராதியை முஸ்லிம் உலகிற்குத் தொகுத்து வழங்கியவர்களும் ன்ஸானுல் காமில் என்ற ஆத்மஞான நூலுக்கு விரிவுரை எழுதியவர்களும் அரபு மொழியில் நிகரில்லாப் புலமை பெற்று அது போன்றே பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நடமாடும் பல்கலைக் கழகமாக விளங்கியவர்கள்.