ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, சென்னை சார்பில் 10.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் மதியம் 2.00 மணி வரை அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் உதய தின விழா (மீலாத் விழா) பாருக் மஹால் பழைய எண் 85, புதிய எண் 185, ஆதம் தெரு, ராயபுரம், சென்னை 13 ல் மிகவும் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
ஜனாப் H.M.ஹபீபுல்லா BSc ஹக்கியுல் காதிரி அவர்கள் தலைமையில், மெளலவி ஹாபீஸ் சையது ஜுபைர் அஹ்மது அவர்கள் கிராஅத் ஓத, Er.ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
P.A.காஜா முஹைனுத்தீன் பாகவி அவர்கள், தலைவர் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, பேராசிரியர் உஸ்மானியா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம்.
அல்ஹாஜ் ஹாபிழ் M.முஹம்மது அபுதாஹிர் ஆலிம் பாகவி நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி, சேலம்.
T.S.A.அபூதாஹிர் ஃபஹீமி மஹ்ழரி ஜமாலி - ஆசிரியர் அல் அஸ்ரார் மெய்ஞ்ஞான மாத இதழ். மற்றும்
திரு.வீரபாண்டின் அவர்கள், அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர் - ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
அருளிசை அருவி A.ஷேக் மதார் B.Com, S.அம்ஜத் காதிரி, மற்றும் அருப்புக்கோட்டை ஜபருல்லா ஆகியோர் நபி புகழ்பா பாடினார்கள்.
ஹாஜா முஹைதீன் ஹக்கியுல் காதிரி நன்றியுரை வழங்க, விழா சிறப்பாக நிறைவுற்றது. விழா முடிவில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் விழாவில் கலந்து கொண்ட அணைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உலகம் முழுவதும் ஏழை எளியவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவி புரிவதில் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சியில் 25 வருடமாக ஏழை மற்றும் அனாதை குழந்தைகளுக்கான ஒரு மதரசாவை முற்றிலும் இலவசமாக நடத்திவருகிறது. இந்த மதரசாவில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு இஸ்லாமியக்கல்வியுடன், பள்ளி மற்றும் பட்டப்படிப்பிற்கான வசதிகளுடன் தொழிற்கல்வி மற்றும் கம்ப்யூட்டர் கல்வியும் கற்றுத்தரப்படுகிறது.
இந்த ஆன்மீக, மனித நேய, சமுதாய நல்லிணக்க இயக்கத்தின் ஸ்தாபகரும் ஆன்மீக ஞான குருவுமாகிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் வாரிசுமான ஷெய்குல் காமில் குதுபுஜமான் ஷம்சுல் வுஜுது ஜமாலிய்யா செய்யிது கலீல் அவ்ன் மௌலான அல்ஹஸனியுள் ஹுசைனியுள் ஹாஷிமி நாயகம் அவர்களின் வழி காட்டுதலின்படி இந்த சமுதயப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
Assalamualaikkum, I am A.MAHABOOB BASHA, ADVOCATE AND NOTARY PUBLIC, ERODR request you all to kindly add me in your group in EM Sabai and activate EM Sabai to my ohone. Thank you
பதிலளிநீக்கு