சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ஹாஜா முஹையதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.
--------------------------------------------------------------------------------------
தலைமை உரையாக ஹாஜா முஹைத்தீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் இந்த மாதம் ஜமாலிய்யா வாப்பா மாதம், அவர்களின் உயர்வு,உன்னத நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------- --------------------
மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் அல்லாஹீவுக்கும்,ரசூலுக்கும் கட்டுப்படுங்கள், உங்கள் தலைவருக்கும் கட்டுப்படுங்கள் என்ற குர்ஆன் வசனம் பற்றி விரிவாக உரையாற்றினார்.
-------------------------------------------------------- -------------------- ---------
Er.ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்கள் அல்லாஹ் பற்றி அறிவது முதல் கடமை,அறிவின் கர்வம் அகப்பொறாமை அகல வேண்டும் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
Prof.இப்ராஹிம் கலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் மாதந்திர கூட்டத்தில் நமது ஷெய்கு நாயகம் ஹாளிராகி உள்ளார்கள்.கூட்டத்தில் எந்த கருத்து வெளியாக வேண்டுமோ அந்த கருத்து மட்டுமே வெளியாகும் என உரையாற்றினார்.
-------------------------------------------------------- ----------------------------
-------------------------------------------------------- ----------------------------
S.B.ஆசிப் ஹக்கியுல் காதிரி அவர்கள் இறைருப்பாவிலிருந்து ஏகாந்த பாடல் பாடினார்.
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஹக்கைப்பற்றி சிந்திக்க வேண்டும் வாப்பா நாயகத்தின் பிள்ளைகள் வைரக்கல் என்று உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
ஆயத்துல்லா குமைனீ ஹக்கியுல் காதிரி அவர்கள் கலீலே கலீலே என்ற பாடலை பாடினார்.
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
முஹம்மது ரஹ்மத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்கள் ஸஹாபாக்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான், முரீதுகள் ஷெய்கு நாயகத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
அப்துல் ஜலில் ஹக்கியத்துல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயத்திடம் மைய்யத்தாக இருக்க வேண்டும்,ஷெய்கு நாயகம் இல்லாத இடமே இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்
--------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்
தவ்பா பைத் ஓதி, தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக