சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா.Adv.பீர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் கலீபா.Adv.பீர் முஹம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------
கலிபா Adv.M.பீர் முஹம்மது அவர்கள் வலிமார்கள்,குத்துமார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------
S.M.முஸ்தபா அவர்கள் வேதங்களில் உள்ள உயிர் சத்தான ஞான விஷயங்கள்,நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------
Eng.N.அப்துல் ஜலீல் அவர்கள் முஹிய்யித்தீன் – தீனை உயிர் பித்தவர், முஹிய்யித்தீன் ஆண்டகையின் உயர்வு, உச்ச நிலை என்று உரையாற்றினார்.
----------------------------------------------------------
திவான் அப்துல் காதர் அவர்கள் நமது ஷெய்கு நாயத்தின் சொல்லை, உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று உரையாற்றினார்.
---------------------------------------------------------
முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உடலும்,உயிரும் குருவிலே அழிப்பது சாலச்சிறந்த்து என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------
Prof.இப்ராஹிம் கலில் அவர்கள் தினமும் பத்து நிமிடமாவது ஆன்மாவைப்பற்றி,நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------
O.M.C.ஜெய்லானி அவர்கள் முஹிய்யித்தீன் ஆண்டகையின் பாதம் யாருடைய தோல் மீது உள்ளதோ அவரே வலியுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------
காதர் மீரா கனி அவர்கள் இறந்து மடிந்து, மருண்டு இருக்கும் உள்ளங்களை ஹயாத்தாக்கவே நாம் அருவாயிருந்து உருவானோம் என்ற நமது ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.